ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் ரூ.12.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் ரூ.12.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ‘ஆரூத்ரா கோல்டு’ நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக தனதுவாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆசியம்மாள் நேற்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ‘ஆரூத்ரா கோல்டு’ நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் வரவில்லை. அவர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in