Published : 27 Jun 2023 06:10 AM
Last Updated : 27 Jun 2023 06:10 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திறந்து வைத்தார். இந்த புதிய முனையம் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.
தொடர்ந்து சோதனை முயற்சியில் புதிய முனையத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. அவற்றை சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
ஜூன் மாதம் 13-ம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய முனையத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம்ஏற்பட்டதால், அடுத்தபடியாக வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்குஇயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ்விமானம் ஆகியவையும் புதியமுனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று அதிகாலைஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்விமான நிறுவனங்களின் அனைத்துசர்வதேச விமானங்களும், புதியமுனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்துஇயங்கத் தொடங்கியுள்ளன.
இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் புதிய முனையத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன. பெரியரக விமானங்கள் ஜூலை முதல் வாரத்தில் இயங்கப்படவுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் இருந்து, புதிய முனையம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. பின்னர், தற்போது செயல்பாட்டில் இருக்கும் டெர்மினல் 3 என்ற (டி 3) பழைய சர்வதேச முனையம் முழுமையாக மூடப்படும். அங்கு, பேஸ் 2 கட்டுமானப் பணி விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT