

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும், ஜூலை 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.