

பாஸ்கர், மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர்
ஆன்லைன் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் மற்றும் பிளாட் பாரம் டிக்கெட் எடுக்கும் வசதி வரவேற்கத்தக்கது. ஆனால், இதற் காக கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
பல புறநகர் ரயில் நிலையங்க ளில் பயணிகள் நிற்பதற்கான நிழற்குடையும், நடைமேம்பால வசதியும் இல்லை. அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் முதலில் செய்ய வேண்டும்.
புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைப்பது என்பது யதார்த்தத்தில் ஒத்துவராத விஷயமாக உள்ளது. காரணம், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புறநகர் ரயில்களின் எண் ணிக்கை இல்லை. புறநகர் ரயில் களில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பெரும் பாலான பயணிகள் படிக்கட்டு களில் நின்று பயணம் செய்கின் றனர். தானியங்கி கதவு அமைத் தால், பெட்டிக்குள் கூட்ட நெரி சல் ஏற்படும். இதைத் தடுக்க தற்போதுள்ள 9 பெட்டிகளின் எண் ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும்.
தமிழ்நாட்டிற்குள்ளே இயக்கப் படும் இன்டர்சிட்டி ரயில்கள் அறி முகப்படுத்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது அறிவிக்கப் பட்டுள்ள 4 புதிய ரயில்களாலும் பெரிய பயன் இல்லை.
ரவிக்குமார், அனைத்திந்திய ரயில், பஸ் உபயோகிப்பாளர் சங்க தலைவர்
இந்த பட்ஜெட் ஒரு கண்துடைப் பாக உள்ளது. பயணிகள் கட்டணம் குறைக்கப்படும் என எதிர் பார்த்தோம். ஆனால், அதை குறைக்காதது ஏமாற்றம் அளிக் கிறது. ரயில் நிலையங்களில் எஸ்க லேட்டர், ரயில்களில் தானியங்கி கதவுகள், ஏ மற்றும் ஏ1 கிரேடு ரயில் நிலையங்களில் இணை யதள WiFi சேவை ஆகியவை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேசமயம், ரயில் நிலையங் களில் பாதுகாக்கப்பட்ட இலவச குடிநீர், குறைந்த விலையில் தரமான உணவுகள், போதிய கழிப்பிட வசதிகள் ஆகியவை ஏற்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் கள் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
முகையன், திருநின்றவூர் ரயில் பயணிகள் நலச் சங்கம்
செல்போன் மற்றும் ஆன் லைன் மூலம் ரயில் டிக்கெட்டு கள் பெறுவதற்காக வெளியிடப் பட்டுள்ள புதிய அறிவிப்பு வரவேற் கத்தக்கது. கூடுதல் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட புறநகர் ரயில்களே இதுவரை இயக்கப்படவில்லை. எனவே, இதுவும் அறிவிப்போடு நின்று விடக்கூடாது.
மேலும், இந்த பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிப்பு ஏதும் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
தணிகாச்சலம், வியாபாரி
பல வழித்தடங்களில் போதிய ரயில் சேவைகள் இல்லை. அத் துடன், பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட சில ரயில்கள் இன்னும் கூட இயக்கப்படவில்லை. இந்நிலை யில், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட ரயில்களையாவது கூடிய விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சில விரைவு ரயில்கள் அதிவிரைவு (சூப்பர் ஃபாஸ்ட்) ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் வேகம் அதிகரிக்கப்படவில்லை. ரயில் கட்டணத்தை மறைமுகமாக ஏற்று வதற்காக இதுபோன்ற அறிவிப்பு கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரவிந்த், கல்லூரி மாணவர்
எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம், விஜயவாடா. நான் சென்னை அருகே ஒரு பொறி யியல் கல்லூரியில் படிக்கிறேன். இந்த ரயில்வே பட்ஜெட்டில் ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டிற்கு 2 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்ற வர்களுக்கு இந்த புதிய ரயில் சேவை பயனுள்ளதாக அமையும்.