

ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி இருவரும் மிரட்டி சொத்து வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச மாக முடித்துக் கொள்ளப்பட்டதை யடுத்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா, ‘இது அரசியல் ரீதியான வழக்கு. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர் விலகிவிட்ட நிலையிலும் தமிழக அரசு சார்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில், ‘பாதிக்கப் பட்டவர் வாபஸ் பெற்றுக் கொண் டாலும் சொத்து அபகரிப்பு குற்றத் தன்மை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை,’ என்று வாதிடப்பட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.