ஷூட்டிங்குக்கு வருவது அரசியல் அல்ல: வானதி சீனிவாசன் கருத்து

கோவை பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேஜை உள்ளிட்ட பொருட்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழங்கினார்.
கோவை பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேஜை உள்ளிட்ட பொருட்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழங்கினார்.
Updated on
1 min read

கோவை: "ஷூட்டிங்குக்கு வருவது அரசியல் அல்ல. வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணிப்பதுதான் அரசியல்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேஜை மற்றும் பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தார் என்றால், அதை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். ஏனென்றால், இளைஞர்கள் அரசியலுக்கு அதிகமாக வரும்போதும், அரசியலில் அவர்கள் பங்குபெறும்போதும், அரசியல் ஜனநாயகத்துக்கு ஒரு புதிய வேகம் கிடைக்கும்.

அதனால், நடிகர் விஜய் அரசியலில் நேரடியாக களத்துக்கு வருவார் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை வரவேற்கிறோம். விஜய் மட்டுமல்ல, இன்னும் எந்த நடிகர்கள் வந்தாலும் வரவேற்போம். இதற்கு முன்பாககூட, ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தார். அடுத்த முதல்வர் நான்தான் என்று சொன்னார். ஆனால், அவர் என்ன செய்தார்? ஷூட்டிங் வருவதுபோல அரசியலை நினைக்கின்றனர். ஷூட்டிங்குக்கு வருவது அரசியல் அல்ல. வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணிப்பதுதான் அரசியல்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in