கடலோர மேலாண்மை திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: ஆக.4-க்குள் பொதுமக்கள் கருத்துகளை கூறலாம்

கடலோர மேலாண்மை திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: ஆக.4-க்குள் பொதுமக்கள் கருத்துகளை கூறலாம்
Updated on
1 min read

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கான கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு, நில பயன்பாட்டு வரைபடங்கள் ஆகியவை தற்போது தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின்படி, இதுதொடர்பாக அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள், பொதுமக்களின் ஆலோசனைகள், கருத்துகளை அறிவதற்காக, சுற்றுச்சூழல்துறையின் http://www.environment.tn.gov.in என்ற இணையதளத்திலும், இத்துறையின் ENVIS மையத்தின் http://www.tnenvis.nic.in-லும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இந்த திட்ட வரைவு அறிக்கை குறித்து கருத்துகள், ஆலோசனையை, ஆக.4-ம் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் எழுத்து மூலம் இத்துறைக்கு அனுப்பலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in