Published : 22 Oct 2017 11:04 AM
Last Updated : 22 Oct 2017 11:04 AM

தெ.மேற்கு பருவகாற்று அக்.24 முதல் விலக வாய்ப்பு

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளில் இருந்து, வரும் 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே, வட மாநிலங்களின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படி யாக விலகி வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் இன்னும் விலகவில்லை. அதனால், தமிழகத்துக்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறும்போது, தென்னிந்திய பகுதிகளில், தெலங்கானா, கடலோர ஆந்திரத்தில் வரும் 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக விலகத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x