யோகக் கலையை வழங்கிய ரிஷிகளையும் சித்தர்களையும் ஈன்ற தமிழகத்தால் தேசம் பெருமை அடைகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

யோசா செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
யோசா செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated on
1 min read

சிதம்பரம்: யோகா கலையை வழங்கிய ரிஷிகளையும் சித்தர்களையும் ஈன்ற புண்ணிய பூமி தமிழகத்தால் தேசம் பெருமை அடைவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் யோகாசனம் செய்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு யோகாசானங்களை செய்தனர்.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தனிநபர்கள் மற்றும் கூட்டுச்சமூகத்துக்கு முழு உடல், மனம் சார்ந்த நலனை வழங்கும் அறிவியலான யோகா கலையை வழங்கிய பதஞ்சலி, திருமூலர் போன்ற மாபெரும் ரிஷிகளையும் சித்தர்களையும் ஈன்ற புண்ணிய பூமி தமிழகத்தால் தேசம் பெருமை அடைகிறது. யோகாவை உலகுக்கு பரப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in