

சென்னை: பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு எல்ஐசி பாலிசிகள் மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசிகளின் உரிமங்களைக் கோருபவர்களுக்கு பல்வேறு தளர்வுகளை எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி அறிவித்துள்ளார்.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எல்ஐசி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து துயர் துடைக்கும் பொருட்டு கோட்ட அளவில் இதற்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைனில் உரிமம் கோருபவர்களுக்கு உதவியாக http://10.240.3.226/csTicket/scp/login.php என்ற உரலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உரிமம் கோருபவர்கள் தங்கள் உரிமம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். எல்ஐசியின் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.