

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டத்தில் அமைய அதிக வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி., இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால், செங்கிப்பட்டியை ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடமாகத் தேர்வு செய்தார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது.
வித்தியாசமாக ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவே நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு குறித்து கருத்து தெரிவிக்கிறார். தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் நிலவேம்பு குறித்து ஆராயத் தேவையில்லை" என அவர் கூறியிருக்கிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவே அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.