Published : 10 Oct 2017 05:48 AM
Last Updated : 10 Oct 2017 05:48 AM

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை பெறலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் சென்னை புதுப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தை சாமி ஆகியோர் புதுப்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம். காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏராளமான குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளன.

நான் ஒரு புறம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு புறம், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றொரு புறம் சென்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். டெங்கு தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x