

ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்ற தொழிலாளி கூறியதாவது:
மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் நானும் என் பெற்றோரும் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்தோம். சில நாட்களுக்கு முன்பு நானும் அம்மாவும் சொந்த ஊருக்கு சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். கட்டிடம் இடிந்த செய்தியை கேள்விப்பட்டு பதறியடித்து வந்தோம். என் தந்தை என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை.
அங்கு கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களிலும் சுமார் 400 பேர் வேலை பார்த்தோம். பாதி பேர் இடிந்து விழுந்த கட்டிடத்திலும், மீதி பேர் மற்றொரு கட்டிடத்திலும்தான் தங்குவோம். எங்களுக்கு தலைக்கவசம் உள்பட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.