இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறை புதிய திட்டம்: உதவி எண்கள் அறிவிப்பு

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறை புதிய திட்டம்: உதவி எண்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல் துறையின் உதவி எண்களான 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம் என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்கள் பாதுகாப்புக்கு என புதிய திட்டம் ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004 -23452365 மற்றும் 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம்.

காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in