Published : 20 Jun 2023 04:03 AM
Last Updated : 20 Jun 2023 04:03 AM
மதுரை: தமிழக பாஜக செயலாளர் சூர்யாவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். இது பொய்யான தகவல். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், போலீஸார் சூர்யாவை கைதுசெய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்தார். விசாரணையை நீதித்துறை நடுவர் பானு இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் சூர்யாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT