29-ம் தேதி பக்ரீத்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

29-ம் தேதி பக்ரீத்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘துல்ஹஜ் மாதத்துக்கான புதிய
பிறை 19-ம் தேதி (நேற்று) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. இதையடுத்து, பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in