Published : 19 Jun 2023 06:58 PM
Last Updated : 19 Jun 2023 06:58 PM

கடலூரில் வீட்டு மின் இணைப்புக்கு டெபாசிட் கட்ட சொல்வது ஏன்?

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வீட்டு மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றால் தங்களது வீட்டு மின் இணைப்புக்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இதுபற்றி சரியான விவரம் தெரிவிக்கப்படவில்லை என்று ‘இந்து தமிழ் திசை'யின் ‘உங்கள் குரல்' பகுதியில் வாசகர்கள் பலர் புகார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள்: வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட்டாக கட்டவேண்டும். அதன் பிறகு தான் வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்படும். மின் இணைப்பு வழங்கப்பட்ட வீட்டில் மின்சாரத்தை எந்த அள வுக்கு பயன்படுத்துகிறார்களே. அந்த அளவுக்கு இரண்டு மாதத் துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்த வேண்டும். 100 யூனிட் வரை மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம்.

அதற்கு மேல் மின் சாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப மின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தற்போது பலர் மின் கட்டணம் செலுத்த மின்துறை அலுவலகத்திற்கு செல்லும்போது, அங்கு பணியில் இருக்கும் காசாளர் மின் இணைப்புக்கான டெபாசிட் ரூ.500 அல்லது ரூ.1,000 அல்லது ரூ.1,500 அல்லது ரூ.2,000 கட்ட வேண்டும் என்று கூறுவதால் மின் நுகர்வோர் குழப்பத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு ஒரு தெளிவான விளக் கத்தை மின்வாரியம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதாசி வம் கூறுகையில், “ஒரு வீட்டு மின் இணைப்பை பெற்ற ஒருவர், ஒரு ஆண்டு முழுவதும் செலுத்திய மின் கட்டணத்தை கணக்கிட்டு அதனை சராசரியாக்கி, அந்த தொகையை மூன்று மடங்காக்கினால் என்ன தொகை வருகிறதோ அந்த தொகை தான் டெபாசிட் தொகை ஆகும்.

மின் இணைப்பை பெற்றவர் மின்சாரத்தை பயன்படுத்துவதை பொறுத்தே டெபாசிட் கூடும். மின் இணைப்பு தேவையில்லை என்று மின் நுகர்வோர்கள் கூறி மின் இணைப்பை துண்டிக்க சொல்லும்போது இந்த டெபாசிட் தொகை வட்டியுடன் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x