

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 20 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
தற்போது வானிலை மாறியுள்ள நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு நேற்று தமிழகத்தில் ஒரு இடத்திலும் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் பதிவாகவில்லை. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.