

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் கூடுதல் மத்திய ஆணையராக பங்கஜ் அண்மையில் பொறுப்பேற்றார்.
எனவே, தொழிலாளர்கள், நிறுவன முதலாளிகள் ஆகியோர் பி.எஃப். கிளெய்ம் செட்டில் மென்ட், ஓய்வூதியம் உள்ளிட்ட குறைகள் ஏதேனும் இருப்பின், ஆணையர் பங்கஜ்ஜை வேலை நாட்களில் தினமும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சந்தித்து குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
மேலும், ஆணையரைச் சந்திக்க 044-2813 0007 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற வேண்டும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, ஏ.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.