Published : 19 Jun 2023 04:17 AM
Last Updated : 19 Jun 2023 04:17 AM

8 ரயில்களில் தூங்கும் வசதி பெட்டியை நீக்கி மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் சேர்ப்பு: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு ரயில் உட்பட 8 விரைவு ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக, ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் - மங்களூரு உள்பட 8 விரைவு ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்படவுள்ளது. இதற்கு மாற்றாக, செப்டம்பர் மாதம் முதல் மூன்றடுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (12602) ஒரு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இந்த வசதி செப்.13-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது, சென்னை சென்ட்ரல் - மங்களுருக்கு இயக்கப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயிலில் (22637) ஒரு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, மாற்றாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப் படவுள்ளது.

இந்த மாற்றம் செப்.14-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தவிர, சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் அதிவிரைவு மெயில் ரயில் (12601) உட்பட 6 ரயில்களில் தலா ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக தலா ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி சேர்க்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x