Published : 02 Oct 2017 17:38 pm

Updated : 02 Oct 2017 17:38 pm

 

Published : 02 Oct 2017 05:38 PM
Last Updated : 02 Oct 2017 05:38 PM

சென்னை அண்ணாசாலையில் இளம்பெண்ணிடம் 8 சவரன் செயின் பறிப்பு: கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்கிய நபர்கள்

8

நந்தனம் அண்ணா சாலையில் நடந்து சென்ற இளம்பெண் கழுத்திலிருந்த தாலி செயின் உட்பட 8 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, சின்னையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(30) வங்கி ஊழியர். இவரது மனைவி (சசிகலா (27) தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது.


சசிகலா வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு தினமும் நடந்துச்சென்று வழிபடுவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சசிகலா, தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட வீட்டிலிருந்து நடந்து சென்றார். சனிக்கிழமை தொடர் விடுமுறை காரணமாக சாலையில் வாகனங்களே இல்லை.

அண்ணா சாலையில் நந்தனம் வழியாக சென்று கொண்டிருந்த சசிகலாவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் நந்தனம் பள்ளிவாசல் அருகே வரும்போது திடீரென அவர் கழுத்திலிருந்த செயினைப் பறித்துள்ளனர்.

திடீரென தன் கழுத்திலிருந்த 8 பவுன் தாலி பறிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகலா அவர்களை பிடிப்பதற்குள் வெறிச்சோடியிருந்த அண்ணா சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் பறந்துவிட்டனர்.

சசிகலா கழுத்திலிருந்து தாலி மற்றும் பெருமாள் டாலர் மொத்தம் 8 பவுனை அவர்கள் பறித்துச்சென்றனர். இது குறித்து சசிகலா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள பள்ளிவாசல் கண்காணிப்பு கேமராவில் திருடர்கள் செயினைப் பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து செயின் பறிப்பு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகையைப் பறிகொடுத்த சசிகலா கூறும்போது செயின் பறித்த திருடர்களை போலீஸார் பிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் அப்போதுதான் இது போன்ற வழிப்பறிகள் குறையும் என்று தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author