Published : 20 Oct 2017 08:31 AM
Last Updated : 20 Oct 2017 08:31 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் ஒப்படைப்பு

ஆலந்தூரை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியார் நிறுவனங்கள் மூலம் கட்டப்பட்ட புதிய வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நந்தம்பாக்கம், துளசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 25 பேருக்கு மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமான எம்ஃபஸிஸ் நிறுவனமும், ‘ஹேபிகேட் பார் ஹுமானிட்டி’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து பாதிக்கப்பட்ட வீடுகள் சீரமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தன. அதே போல் 50 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

இலவச மரக்கன்றுகள்

புதிதாக கட்டப்பட்ட 25 வீடுகளையும், 50 கழிவறைகளையும் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி, பரங்கிமலையில் அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலர் சத்யகோபால் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். எம்ஃபஸிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு முதன்மை இணைத் தலைவர் ராஜன் சாமுவேல், ஹேபிடேட் ஹுமானிட்டி நிறுவனத்தின் மேலாண் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கற்ற பயனாளிகள் அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x