Published : 18 Jun 2023 04:07 AM
Last Updated : 18 Jun 2023 04:07 AM
சேலம்: அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கொச்சுவேலியில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்குகிறது.
அதன்படி, கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில் (வண்டி எண் 06211) இன்று (18-ம் தேதி), 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமைகளில்) கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயம் குளம், மாவேலிக் கரை, செங்கனூர், திருவல்லா, எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 4.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தருமபுரி, ஓசூர் வழியாக காலை 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்,
இதேபோல, மறு மார்க்கத்தில் பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் ( வண்டி எண் 06212) நாளை (19-ம் தேதி), 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) பெங்களூருவில் இருந்து மதியம் 1மணிக்கு புறப்பட்டு ஓசூர், தருமபுரி வழியாக திங்கள் கிழமை மாலை 6.02 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.50 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT