Published : 03 Oct 2017 03:16 PM
Last Updated : 03 Oct 2017 03:16 PM

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள், பெரிய தொகுதி , சிறிய தொகுதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அவர் வெளியிட்டார்.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களால் அந்தந்த மாவட்ட வாக்காளர்கள், தொகுதி பற்றிய விபரங்கள் இன்று (அக்.3-ம் தேதி) வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியல், தொகுதிகளில் பெரியது சிறியது போன்ற விபரங்களை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் விபரம் வருமாறு:

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை- 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 பேர்.

தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 பேர்.

இதில் ஆண் வாக்காளர்கள்- 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேர்.

பெண் வாக்காளர்கள்- 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர்.

மூன்றாம் பாலினத்தவர்- 5 ஆயிரத்து 242 பேர்.

வாக்காளர்கள் விகிதம்: 75.07 (மொத்த மக்கள் தொகையில் 75% வாக்காளர்கள்)

ஆண் பெண் விகிதம் 1021.

அக்டோபர் 3 2017 வரையிலான ஆண், பெண் வாக்காளர்கள் வயது விபரம்.

18-19 வயது வாக்காளர்கள் 5 லட்சத்து 50 ஆயிரத்து 556 பேர்.

20-29 வயது வாக்காளர்கள் 1 கோடியே 22 லட்சத்து 05 ஆயிரத்து 888 பேர்.

30-39 வயது வாக்காளர்கள் 1கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 295 பேர்.

40-49 வயது வாக்காளர்கள் 1 கோடியே 28லட்சத்து 79 ஆயிரத்து 416 பேர்.

50-59 வயது வாக்காளர்கள் 95 லட்சத்து 35 ஆயிரத்து 878 பேர்.

60-69 வயது வாக்காளர்கள் 61 லட்சத்து 47 ஆயிரத்து 636 பேர்.

70-79 வயது வாக்காளர்கள் 31 லட்சத்து 01 ஆயிரத்து 972 பேர்.

80+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 361 பேர்.

தமிழக மொத்த வாக்காளர்கள்- 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 002 பேர்.

தமிழகத்தில் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் 6 லட்சத்து 24 ஆயிரம் வாக்காளர்களும், (ஆண் வாக்காளர்கள்-3 லட்சத்து 13 ஆயிரத்து 789 பேர், பெண் வாக்காளர்கள்- 3 லட்சத்து 10 ஆயிரத்து 542 பேர் மூன்றாம் பாலினத்தவர் 74 பேர்.) 6,24,405

சிறிய தொகுதி கீழ் வேலூர்- 1 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்களும் ( ஆண் வாக்காளர்கள்- 83 ஆயிரத்து 016 பேர். பெண் வாக்காளர்கள்-85 ஆயிரத்து 258 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.) உள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் அதிகம் உள்ள தொகுதி மதுரவாயல். இங்கு 130 பேர் உள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 6 லிருந்து அக்.2 வரை 5 லட்சத்து 47 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 31 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க , நீக்க, முகவரி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்காக அக்டோபர் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு www.nvsp.in  என்ற இணையத்திலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x