நேற்று ‘Naa Ready’ அப்டேட்; இன்று மக்கள் இயக்க நிகழ்வில் பங்கேற்பு - குறிப்பால் உணர்த்தும் விஜய்?

விஜய் | கோப்புப்படம்
விஜய் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஜய் தனது ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெறும் மாணவர்களை பாராட்டும் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக தனது இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டுள்ளார். ரசிகர்கள் புடைசூழ அவரது வாகனம் விழா நடைபெறும் நிகழ்விடத்தை நோக்கி வந்தது. தற்போது விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்துள்ளார்.

இந்நிலையில், மிகவும் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசுவதும் வழக்கம்.

ஏற்கனவே சமகால தமிழக அரசியலில் நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், டி.ராஜேந்திரன் ஆகியோர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் மாணவர்களுக்கான பாராட்டு விழா நீலாங்கரையில் நடைபெறுகிறது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது. அதில் ‘Naa Ready’ என சிங்கிள் பாடல் குறித்து சொல்லப்பட்டது. இந்நிலையில், இன்று மக்கள் இயக்க நிகழ்வில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். இது இரண்டையும் வைத்து பார்க்கும் போது குறிப்பால் தனது அரசியல் வருகையை விஜய் வெளிப்படுத்துகிறார் என்ற கருத்தை எழச் செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in