

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பைவகை பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அசோக்நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
அதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் காட்சி வழி விளக்கம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், பிளாஸ்டிக் பைக்குமாற்றாக பயன்படுத்தும் வகையில், ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய்ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரிசார்பாக வழங்கப்பட்ட 1050 மஞ்சப்பைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.