‘இடி மின்னல்’ கோவிந்தராஜ் மகனுக்கு பணி நிரந்தர ஆணை

‘இடி மின்னல்’ கோவிந்தராஜ் மகனுக்கு பணி நிரந்தர ஆணை
Updated on
1 min read

திருச்சியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(50). இவர் கடந்த 21 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். இவர், தலைமை செயலகத்தில் முதல்வர் வரும்போதும், புறப்படும் போதும், முதல்வரை பற்றியும், அரசின் சாதனைகள் பற்றியும் உரத்த குரலில் தனது இரு கைகளை உயர்த்தியபபடி மணிக்கணக்கில் தொடர்ந்து முழக்கமிடுவது வழக்கம். இதனால், அதிமுவினரால் ‘‘இடி மின்னல்’’ கோவிந்தராஜ் என்றே அழைக்கப்படுகிறார்.

ஏற்கெனவே அவர், தனது மகனின்தற்காலிக பணியை நிரந்தரம் செய்யவேண்டுமென கோரி அரசிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் வழக்கம்போல், புதன்கிழமை தலைமைசெயலகம் முன்பு நின்று கொண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். அவரை முதல்வர் அழைத்து இனி அவ்வாறு முழக்கமிட வேண்டாமென அன்புடன் கூறியுள்ளதாக தெரிகிறது.

இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கோவிந்தராஜ் கூறும்போது, ‘‘பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரம்பலூரில் உள்ள அலுவலகத்தில் ஓ.ஏ.வாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக எனது மகன் சரவணன் பணியாற்றி வருகிறார். அவருக்கு பணிநிரந்தர ஆணை வழங்க முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in