

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: பூந்தமல்லி பைபாஸ்-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி பைபாஸ்-கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட மெட்ரோரயில் பாதையில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
கோடம்பாக்கம் பாலம் முதல்கலங்கரை விளக்கம் வரை, சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்ததடத்தில் ஏற்கெனவே வடபழனிபேருந்து நிலையம் வரை உயர்மட்ட கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதையடுத்து, ஆற்காடு சாலையில் மேம்பாலப் பாதைக்குத் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி பைபாஸ்-வடபழனி மெட்ரோ வழியாக கோடம்பாக்கம்-பவர் ஹவுஸ் மெட்ரோ திட்டப் பணிகளை 2025-ம் ஆண்டு நவம்பரில் முடிக்க உள்ளோம்.