

சென்னை: ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் கோயம்பேடு காய்கனி வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் 1,200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.உயரம்,எடை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஈசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்டபரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவையான ஆலோசனைகளை வழங்கி மருத்துவர்கள் மாத்திரை,மருந்துகளை வழங்கினர். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குஆதிபராசக்தி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைஅளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமை நடத்தியதற்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளார், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் டி.ரமேஷ் ஆகியோருக்கு வணிகர்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும், கோயம்பேடு மார்கெட்டில்நிரந்தர இலவச மருத்துவமனைஅமைக்க வேண்டுமென கோரிக்கைவைத்தனர். இந்த மருத்துவ முகாமைகுருவார தொண்டர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் மத்திய சென்னை மாவட்ட பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.