

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல் பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். வெளி ஆட்கள் கிராமத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரைப்பட இயக்குநரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கெளதமன் நேற்று அதிகாலை மேல்பாதி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேசினார். இத்தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று கௌதமனை வெளியேற்றி, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர்.
பின்னர் எஸ். பி. கோ.சஷாங்க் சாயை சந்தித்து மேல்பாதி பிரச்சினை குறித்து அவர் கேட்ட றிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வ.கெளதமன், “மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இப்பிரச்சினை யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு இதை தூண்டி விட்டுள்ளனர். கோயில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறைஅமைதிப் பேச்சுவார்த்தை நடத் தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. திரெளபதி அம்மன் கோயில்இந்து சமய அறநிலையத்துறைக் குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை” என்றார்.