செந்தில்பாலாஜி கைது | ‘ஒன்றிய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது அமலாக்கத் துறை. நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக விளையாட்டுத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அவரை பார்ப்பதற்கு வந்திருந்தார்.

“ஒன்றிய அரசின் இந்த உருட்டல் மிரட்டலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சாது. இதனை சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அவரது தம்பி மற்றும் உதவியாளரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் அதிகாலை 2 மணி அளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in