Published : 14 Jun 2023 06:12 AM
Last Updated : 14 Jun 2023 06:12 AM

சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி 2022-23-க்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலானகூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் வரும் 25-ம் தேதிக்குள் சமுதாய அமைப்பாளர்கள் மூலம் சென்னை நகர இயக்க மேலாண்மை அலகு, எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x