

சென்னை: சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு பகுதியில் அதிநவீன முறையாக 360 டிகிரி கோணத்தில் துல்லியமான அறுவை சிகிச்சை செய்ய உதவும் புதிய தொழில்நுட்பம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக எஸ்ஆர்எம்குழும தலைவர் ரவி பச்சமுத்துமற்றும் மருத்துவமனையின் முடநீக்கியல் அறுவை சிகிச்சைத் துறைஇயக்குநர் மருத்துவர் பி.சூர்யநாராயணன் ஆகியோர் கூறியதாவது: சிம்ஸ் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைகளில் பல்வேறு நவீன மருத்துவ முறைகளும், உபகரணங்களும் தற்போதுபயன்பாட்டில் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக உயர் நுட்ப சிகாகோஹிப் பிரசர்வேஷன் சர்வீஸ், நவிவிஸ் சிஸ்டம், கஸ்டம் டாக்கிங் ஆக்மென்ட் டெக்னாலஜி மற்றும் பாலிமோஷன் அட்வான்ஸ் ஹிப் ரிசர்ஃபேசிங் சிஸ்டம் என்ற 4 வகையான அதிநவீனதொழில்நுட்பங்கள் சிம்ஸ் மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம் அறுவை சிகிச்சையின் போது, துல்லியமாக சில உபகரணங்களை உடலுக்குள் பொருத்த முடியும். அதேபோல், 360டிகிரி கோணத்தில் இடுப்பு மூட்டு பகுதியில் சிகிச்சை அளிக்கலாம்.
இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய உயர் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை சிம்ஸ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ உலகிலும், குறிப்பாக முடநீக்கியல் துறையிலும் இது ஒரு மைல்கல் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது மருத்துவர்கள் பிரசாத், விஜய் சி போஸ், கிறிஸ்டியன் காலமீ, பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.