Published : 14 Jun 2023 06:25 AM
Last Updated : 14 Jun 2023 06:25 AM
சென்னை: தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, பெங்களூருவில் உள்ள ஃபீனிக்ஸ் ஸ்கிரீனிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறியது: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தடயவியல் சார்ந்த சேவைகளை ஃபீனிக்ஸ் ஸ்கிரீனிங் மையம் வழங்கி வருகிறது. எங்கள் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் பல்வேறு திறன் மேம்பாட்டுக்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
குறிப்பாக தொழிற்துறை சார்ந்த பயிற்சிகள், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கருத்தரங்குகள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் துறை சார்ந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்றார்.
இதில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் செந்தில்குமார் மற்றும் ஃபீனிக்ஸ் ஸ்கிரீனிங் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜய் ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர். தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளர் மோகன், உதவி பேராசிரியர்கள் லின்சி, ஆனாமிகா, சாண்டிரா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT