

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடிநீர் வாரியத்தின் மண்டலம் 14 மற்றும் 15-க்கு உட்பட்ட கழிவுநீர் மேலாண்மை கண்காணிப்பு படைகள் ஒருங்கிணைந்து மாம்பாக்கம் சாலையில் திடீர் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டன. அப்போது டிஎன் 19 எல் 8365 எனும் பதிவெண் கொண்ட தனியார் லாரியில் இருந்து சிட்லபாக்கம் ஏரி அருகே சட்டவிரோதமாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.