மின்னணு ரோந்து முறையை செயல்படுத்த காவல் நிலையங்களுக்கு 408 கையடக்க கணினிகள்

மின்னணு ரோந்து முறையை செயல்படுத்த காவல் நிலையங்களுக்கு 408 கையடக்க கணினிகள்
Updated on
1 min read

சென்னை: தமிழக காவல் துறையில், ரோந்துபணிகளை நவீனப்படுத்த, ‘ஸ்மார்ட்காவலர்' செல்போன் செயலி மூலம் மின்னணு ரோந்து பணிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரிலுள்ள 102 காவல் நிலையங்களுக்கும் 408 கையடக்க கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘‘2023-24 நிதிநிலை கூட்டத் தொடரில், தமிழக முதல்வர்காவல் நிலைய விசாரணை அதிகாரிகளுக்கு விசாரணையின்போது வழக்கின் விவரங்களைபதிவு செய்ய வசதியாக பேப்லட் (Phablets) கருவிகள் வழங்க உத்தரவிட்டார்.

அதன் பேரில், சென்னை பெருநகர காவல் விசாரணை அதிகாரிகளுக்கு ரூ.1.12 கோடி செலவில் 450 பேப்லட் சாதனங்கள் விரைவில்வழங்கப்பட உள்ளன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னைபெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஜே.லோகநாதன் (தலைமையிடம்), இணை ஆணையர்பி.சாமூண்டீஸ்வரி (தலைமையிடம்) உள்்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in