Published : 12 Jun 2023 06:02 AM
Last Updated : 12 Jun 2023 06:02 AM

அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் மனு

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைந்து முடிக்கக் கோரி சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களில் பெரும்பாலானோர் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டுநவம்பர் மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் மருத்துவக் காப்பீடு இல்லாத காரணத்தால், பெறும் ஓய்வூதியத்தில் பெரும்பாலான தொகை மருந்து மாத்திரைக்கே செலவாகிவிடுகிறது. வீட்டு வாடகை கூடகொடுக்க முடியாமலும் உணவுக்காகவும் பிறரிடம் கையேந்தும் நிலைதான் உள்ளது.

இந்நிலையில், அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் எனக்கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தவழக்கில் மேல்முறையீடு செய்ததோடு, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஆஜராவதையும் போக்குவரத்துத் துறை தவிர்த்து வருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிட்டு, வழக்கை உடனடியாக பட்டியலிட்டுத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வஞ்சிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்ற ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x