தமிழகத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா
Updated on
1 min read

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். நேற்று இரவு, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவரை தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும், அதற்கேற்ப அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அமித் ஷா பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in