

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கட்சியின் வளர்ச்சிக்காகத் தாங்கள் இருவரும் மேற்கொண்ட கடின உழைப்பும், தங்களது நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தங்களை இப்பதவி உயர்வுக்கு மிகவும் தகுதியுடையவர்களாக்குகின்றன." என்று தெரிவித்துள்ளார்.