Published : 08 Oct 2017 08:47 AM
Last Updated : 08 Oct 2017 08:47 AM

ஐஐடி மாணவர்களின் விதவிதமான கண்டுபிடிப்புகள்: இன்று நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் பார்க்கலாம்

சென்னை ஐஐடி மாணவர்களின் விதவிதமான கண்டுபிடிப்புகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னை ஐஐடியில் கண்டுபிடிப்பு மையம் என்ற மாணவர்களின் ஆய்வகம் இயங்கி வருகிறது. ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செயல்திட்ட மாதிரிகள், நவீன சாதனங்கள் போன்றவற்றை பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வதற்காக ஆண்டுதோறும் ஒருநாள் சிறப்பு கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு கண்காட்சி கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மைய பட்டறை அருகில் அமைந்துள்ள கண்டுபிடிப்பு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில், மார்ஸ் ரோவர், ரேஸ் கார், தானியங்கி வாகனம் உள்பட 40-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள், தொழில்நுட்ப சாதனங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x