Published : 02 Jul 2014 11:30 AM
Last Updated : 02 Jul 2014 11:30 AM

அரசியல் தலையீட்டால் உயர்கல்வி வளர்ச்சியில் தடை : ஆதங்கப்படும் கல்வியாளர்கள்

விதிகளுக்கு முரணாக துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப் பதாகச் சொல்லி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணியின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருப்பதால் உயர் கல்வி வளர்ச்சியில் பல்கலைக் கழகங்களால் அக்கறை செலுத்த முடியவில்லை என்று கல்வி யாளர்கள் கருத்துத் தெரிவிக்கின் றனர்.

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களாக நியமிக்கப் படுபவர்கள், கல்வித் துறை யில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர் களாகவும் சமுதாயத்தில் மக்க ளால் அறிவுஜீவிகளாக அறியப் பட்டவர்களாகவும் தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர் நிலையில் பணியாற்றிய வர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆராய்ச்சி திட்டங் களைச் செயல்படுத்தி, அதன் பயன்கள் மக்களைச் சென்றடை யும் வகையில் பணியாற்று பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், இன்றோ தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் நிய மிக்கப்படும் துணைவேந்தர்களில் சிலர் தகுதியற்றவர்களாகவும் நீதி மன்ற கண்டனங்களுக்கு ஆளாகும் நபர்களாகவும் உள்ளனர். இன்னும் சிலர், பல்கலைக்கழகத்தை வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி, அரசியல்வாதிகளுக்கு துதி பாடுபவர்களாகவும், கல்வியை வியாபாரமாக்குபவர்களாகவும் உள்ளனர்.

காமராஜர் ஆட்சியில் கல்வித் துறையில் புரட்சி நடந்தது. அந்தப் புரட்சிக்கு காமராஜருக்கு பின்புல மாக இருந்தவர் சென் னைப் பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார். அவரது ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளைத் தான் காமராஜர் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தினார். ஆனால், அதற்கு பின் வந்த ஆட்சிகளில் பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையிலும் அரசியலின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது.

தகுதியற்றவர்களைப் பணியில் அமர்த்துவதும் தகுதியான மாண வர்களுக்கு சேர்க்கை தரமறுத்து விட்டு தகுதியற்ற மாணவர்களுக்கு குறுக்கு வழியில் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பதும் இப்போது மலிந்து விட்டது. மேலும், தேர்வு முறைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கு நிர்வாகமே துணை போவதும் பல்கலைக்கழக நிதி வசூல் மற்றும் செலவு முறை களில் சரியான கண்காணிப்பு இல்லாததால் பணியாளர்களுக்கே ஊதியம் வழங்க முடியாத நிலையில் பல்கலைக்கழகங்கள் தள்ளாடுவதும் தொடர் கதையாகி விட்டது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நிதியைச் செலவிடாமல் பணத்தை குறிப்பிட்ட காலத் துக்குள் செலவு செய்யும் அவசர முயற்சிகளாகவே பல்கலைக் கழகங்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து ’தி இந்து’ விடம் பேசிய கல்வியாளர் கள் கூறியதாவது: பல்கலைக் கழகங்கள் உலகளாவிய பங்கேற்பின் முன்மாதிரியாக விளங்கவும் கல்வித் துறையில் பன் னாட்டு ஒத்துழைப்பை பெற்று, பல்கலைக்கழகங்கள் அதன் எல்லைகளைத் தாண்டி யும் மாணவர்களையும் ஆசிரியர் களையும் தன்பால் ஈர்க்கக்கூடிய செயல் திட்டங்களை வகுக்கவும் வளர்ந்துவரும் உலகில் அறிவுத் துறைகள் அனைத்தும் தன்னுள் கொண்டதாக பல்கலைக் கழகங்களை உருவாக்கவும் கண்டிப்பான சில நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சிறந்த கல்வியாளர்களை துணை வேந்தர்களாக நியமிக்க வேண்டும். அவர்கள் செம்மையாக செயல்பட வசதியாக அவருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் அமைப்புகளில் பல்துறை அறிவு பெற்ற அறிஞர் பெருமக்களை நியமிக்க வேண்டும். எவ்வித அர சியல் குறுக்கீடும் பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்குத் தடையை உண்டாக்காமல் பார்த் துக்கொள்ள வேண்டும். துணை வேந்தர்கள் தவறுசெய்யும் பட்சத் தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாண்பை காப்பாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x