சென்னை - தி.நகர் ஆகாய நடைபாதையில் பராமரிப்புப் பணி

தி.நகர் ஆகாய நடைபாதை
தி.நகர் ஆகாய நடைபாதை
Updated on
1 min read

சென்னை: சென்னை - தி.நகர் ஆகாய நடைபாதையில் உள்ள நகரும் படிகட்டுகள் மற்றும் மின்தூக்கிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை உள்ள நகரும் படிகட்டுகள் மற்றும் மின்தூக்கிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே, 13.06.2023 அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை நகரும் படிகட்டுகள், 14.06.2023 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தெற்கு உஸ்மான் சாலை மின்தூக்கி மற்றும் 14.06.2023 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மார்க்கெட் சாலை ரயில் நிலைய மின்தூக்கி ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மூடப்பட்டிருக்கும்.

இப்பணி நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் வழக்கம்போல் படிகட்டுகளையும், நகரும் படிகட்டுகள் மூடப்பட்டிருப்பின் மின்தூக்கியையும், மின்தூக்கி மூடப்பட்டிருப்பின் நகரும் படிகட்டுகளையும் பயன்படுத்தலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in