பேசின் பிரிட்ஜ் பாலம் பணி: விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

பேசின் பிரிட்ஜ் பாலம் பணி: விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையேபாலம் பணி நடைபெறுவதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவுரயில் (வண்டி எண்.22650) ஜூன் 11, 13-ம் தேதிகளில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னைசென்ட்ரல் விரைவு ரயில் (12658) ஆகியவை வரும் 13-ம் தேதி சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடிவரை மட்டுமே இயக்கப்படும். மேலும், தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயில் (வண்டி எண்.13351), இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில்(22645) இன்றும், நாளையும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாகமாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in