ஆன்லைன் சூதாட்ட தடை எதிர்த்து வழக்கு ஜூன் 30-க்குள் அரசு பதிலளிக்க அவகாசம்

ஆன்லைன் சூதாட்ட தடை எதிர்த்து வழக்கு ஜூன் 30-க்குள் அரசு பதிலளிக்க அவகாசம்

Published on

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்தஉயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு ஜூன் 4-க்குள்பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குதலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஜூன் 30-க்குள் பதில்மனு தாக்கல் செய்யப்படும் என்றார். அதையடுத்து நீதிபதிகள்,பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஜூன் 30 வரை அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை3-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in