

மதுரை: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு களுக்கான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
எம்எல்ஏகள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் 18 நாட்கள் குறை தீர்க்கும் முகாம்களையும், திட்டப் பணிகள் குறித்த ஆய்வுப் பணிகளும் நடைபெற்றன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளோம்.
மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடிந்துள்ளது. பல பிரச் சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் ஏற்கெனவே குறைதீர்ப்பு முகாம் களை வாரந்தோறும் நடத்தி வருகிறது. ஆனால், அந்த முகாம்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெறுவதில்லை. இக்குறையை நீக்கும் வகையில்தான் அனைத்து துறை அதிகாரிகளையும் உள்ள டக்கிய முகாம்களை நடத்தி வருகிறோம். அடுத்த முகாமை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பாலரெங்காபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் திட்டப் பணிகள் ஆய்வு முகாமில் ஓபுளா படித்துறை கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த 27 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை சு.வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் டி.நாகராஜன் உள்ளிட்டோர் வழங்கினர்.
முன்னதாக மதுரை மாநகராட்சி யில் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகர் திட்டப் பணிகள், அம்ரூத் திட்டப் பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,மேயர் இந்திராணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.