காந்தி இர்வின் மேம்பாலப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: சென்னை காவல்துறை அறிவிப்பு 

காந்தி இர்வின் பாலம்
காந்தி இர்வின் பாலம்
Updated on
1 min read

சென்னை: காந்தி இர்வின் மேம்பாலப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

ஈ.வே.ரா சாலையில் காந்தி இர்வின் மேம்பால கீழ்ப்பகுதியில் (வடக்கு) மேம்பாலம் குறுக்கே (காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து, பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளனர். எனவே, 10.06.2023 சனிக்கிழமையன்று இரவு 10 மணி முதல் 12.06.2023 திங்கட்கிழமை காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

இதன் விவரம்: ஈ.வே.ரா சாலையில் சென்ட்ரல் மற்றும் ஈ.வி.கேசம்பத் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கிச் செல்லத் தடை ஏதும் இல்லை.

ஈ.வே.ரா சாலையில் சென்ட்ரல் மற்றும் ஈ.வி.கே சம்பத் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் (Outgoing Side) வழியாக எழும்பூர் நோக்கிச் செல்லலாம்.

எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.

இத்தகைய வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலவழி சிக்னல் சந்திப்பிலிருந்து (தாளமுத்து நடராஜன் மாளிகை சந்திப்பு) இடதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சாலை, உடுப்பி பாயின்ட், வலதுபுறம் திரும்பி, நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை சந்திப்பில் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி செல்லலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in