தென் மேற்கு பருவ மழைக் காலத்தை முன்னிட்டு கோவை - ஹிசார் ரயில் நேரத்தில் மாற்றம்

தென் மேற்கு பருவ மழைக் காலத்தை முன்னிட்டு கோவை - ஹிசார் ரயில் நேரத்தில் மாற்றம்
Updated on
1 min read

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு, கொங்கன் ரயில்பாதை வழியே வரும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது கோவையில் இருந்து ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு சனிக் கிழமைகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22476), வரும் 10-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை கோவையில் இருந்து சனிக் கிழமைகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

தற்போது ஹிசார் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக் கிழமைகளில் மதியம் 2.40 மணிக்கு கோவை வந்து சேரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22475), வரும் 10-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை வந்து சேரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in