Published : 09 Jun 2023 06:38 AM
Last Updated : 09 Jun 2023 06:38 AM
சென்னை: சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை179 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க, கடந்த 2007-ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து, சென்னை பறக்கும் ரயில் நிலையம் உள்ள பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பெருங்குடியில் இருந்துகிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே, இந்த ரயில் பாதை அமையும். இதுபோல, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்துக்கு இணைப்பு ரயில் பாதை அமைக்கப்படும். பயணிகளுக்கான ரயில்கள் பெருங்குடி வழியாகவும், சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும்.
இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது. அந்நிறுவனம் 3 மாதங்களில் ஆய்வை முடித்து, ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1,599 கோடிசெலவாகும். திட்டத்துக்கான வழித்தட அமைப்பு,ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள், தேவையான இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு அறிக்கையில் இடம்பெறும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு, படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT