கடலூர் | 50 ஆண்டுகளாக கேட்கிறோம்... சுடுகாட்டுக்குச் செல்ல சிறு பாலம் வேண்டும் 

கடலூர் | 50 ஆண்டுகளாக கேட்கிறோம்... சுடுகாட்டுக்குச் செல்ல சிறு பாலம் வேண்டும் 
Updated on
1 min read

கடலூர்: குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. ஒவ்வொரு முறையும் உயிரிழந்தவரின் உடலைச் சுமந்து செல்லும் போது, இந்த வாய்க்காலில் இறங்கி, உடலை எடுத்துச் செல்கின்றனர்.

சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை பாலம் கட்டித் தரவில்லை.

ஊருக்குள் ஒவ்வொரு இறப்பு நடக்கும் போதும், இதுபற்றி சலிப்புடன் பேசுவதும் அதன் பின் கலைந்து விட்டு, நடப்பு பணிகளைத் தொடர்வதுமாக இருக்கின்றனர் இப்பகுதி மக்கள். கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை வாய்க்கால் வழியே சுமந்து செல்வதை சமூக வலைதளத்தில் அக்கிராம மக்கள் வெளியிட்டு, தங்களின் நீண்ட கால பிரச்சினையை பொதுவெளிக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், உடனடியாக பாலம் கட்டி தர வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகர் மக்கள் தற்போதும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in