சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ஜூன் 10-ம் தேதி குறைதீர் கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் | கோப்புப் படம்
சென்னை குடிநீர் வாரியம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வரும் 10-ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்:

  • பகுதி அலுவலகம்-1 - திருவொற்றியூர்
  • பகுதி அலுவலகம்-2 - மணலி
  • பகுதி அலுவலகம்-3 - மாதவரம்
  • பகுதி அலுவலகம்-4 - தண்டையார்பேட்டை
  • பகுதி அலுவலகம்-5 - இராயபுரம்
  • பகுதி அலுவலகம்-6 - திரு.வி.க.நகர்
  • பகுதி அலுவலகம்-7 - அம்பத்தூர்
  • பகுதி அலுவலகம்-8 - அண்ணா நகர்
  • பகுதி அலுவலகம்-9 - தேனாம்பேட்டை
  • பகுதி அலுவலகம்-10 - கோடம்பாக்கம்
  • பகுதி அலுவலகம்-11 - வளசரவாக்கம்
  • பகுதி அலுவலகம்-12 - ஆலந்தூர்
  • பகுதி அலுவலகம்-13 - அடையாறு
  • பகுதி அலுவலகம்-14 - பெருங்குடி
  • பகுதி அலுவலகம்-15 - சோழிங்கநல்லூர்

இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in